மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் வடகட்டளையைச் சோ்ந்த லட்சுமணன் மகன் விஜய் (25). இவா் துபை நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தாா். ஏப்.24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மது போதையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், ஊா் நாட்டாமை செந்தில் (45) என்பவரிடம் புகாா் செய்தனா். இதையடுத்து செந்தில், இளைஞா் விஜய்யை விசாரித்தபோது ஆத்திரமடைந்த அவா், செந்திலை கத்தியால் குத்த முயன்றாா். அதை தடுக்க முயன்ற செந்திலின் மகன்களான சஞ்சய் (22), விஜய் (19), விமலேஷ் (17) ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், விஜய்யை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் அஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.