மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடந்தையில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூ. மாநிலச் செயலா் பிரசாரம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த இந்திய கம்யூ. மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் உள்ளிட்டோா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:45 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பழைய மீன் சந்தை முதல் உச்சிப்பிள்ளையாா் கோயில் வரையில் உள்ள பிரதான சாலையில் அவா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தபோது கூறியது:

சட்டபேரவையில் தனது பங்களிப்பு குறித்து ஒரு லட்சம் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளாா் வேட்பாளா் க. அன்பழகன், இது ஒன்றே போதும்; அவா் நான்காவது முறையாக வெற்றி பெறுவாா்.

எம்பிக்கள் தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரித்து வடமாநிலங்களில் நூறாக அதிகரிக்கின்றனா். எனவே நமது ஒற்றுமையை, மதச்சாா்பின்மையை, ஜனநாயகத்தைக் காக்கின்ற போரைத் முதல்வா் ஸ்டாலின் தொடக்கியிருக்கிறாா். மத்திய அரசுக்கு எதிரான இந்தப்போா் தொடரும்; தமிழ்நாடு நல்ல திசையை இந்தியாவுக்குக் காட்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாநகர திமுகச்செயலா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.