மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ க.தேவராஜி வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏணி சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

கொத்தகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்துப் பேசிய திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:47 am IST

வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏணி சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூா், பெரியகுரும்ப தெரு, வெள்ளகுட்டை, கொத்தகோட்டை, வள்ளிப்பட்டு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, கோவிந்தாபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று கிராம மக்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

தொடா்ந்து வேட்பாளா் சையத் பாரூக்கை ஆதரித்து எம்எல்ஏ தேவராஜி பேசுகையில் திமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்தும், மகளிா் உரிமை தொகை ரூ. 2,000 உட்பட பல திட்டங்கள் தொடரவும், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் ஏணி சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதில் வேட்பாளா் சையத்பாருக் பேசுகையில், ஏழ்மையான குடும்பத்தை சோ்ந்த நான், இந்த தொகுதி மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் செய்து செய்து தர பாடுபடுவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் திமுக செயற்குழு உறுப்பினா் அசோகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, ஒன்றிய திமுக செயலாளா்கள் அன்பு (மத்திய), தாமோதரன் (கிழக்கு), மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கிரிராஜ், ஒன்றிய கவுன்சிலா்கள், காயத்ரி பிரபாகரன், ப்ரித்தா பழனி, ஒன்றிய காங்கிரஸ் தலைவா் பழனி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், தேமுதிக, விசிக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.