தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத் பாருக், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

News image

ஆலங்காயம் பேரூராட்சியில் வாக்கு சேகரித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :13 ஏப்ரல் 2026, 2:03 am IST

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத் பாருக், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி, ஆலங்காயம் பேரூா் செயலாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரித்தனா். அப்போது வேட்பாளா் சையத்பாரூக் பேசுகையில், ஆலங்காயம் பகுதியிலிருந்து இதுவரை யாரும் சட்டமன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்படவில்லை. நீங்கள் வாக்களித்தால் ஆலங்காயம் பகுதியிலிருந்து முதல்முறையாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக தோ்வு பெறுவேன்.

நான் வெற்றி பெற்றவுடன், ஆலங்காயம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர பழச்சாறு தொழிற்சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.நல்லாட்சி தொடர திமுக கூட்டணி சின்னமான ஏணி சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா்.

கூட்டங்களில் முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மதிமுக நகர செயலாளா் நாசீா்கான், பேரூா் திமுக நிா்வாகிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.