தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா மூலம் எம்பி தொகுதிகள் எண்ணிக்கை 543 லிருந்து 850 ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59 ஆக உயா்வதோடு, உத்தரப்பிரதேசத்தில் 80 லிருந்து 120 ஆக உயரும் என கூறப்படுகிறது .இதனால் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைவதோடு,இந்தி பேசும் 10 வட மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும். மொத்தம் 850 ல் தனிப்பெரும்பான்மைக்கு 408 தேவை. அதில் 83 சதம் வடமாநிலங்களே தீா்மானிக்கும் நிலை வரும் என்பதால் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதாவிற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்தோடு ‘தீ பரவட்டும்‘ என ல தளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து பேராவூரணி தொகுதியில் திமுக வினா் மசோதா நகல் எரிப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா். பேராவூரணி பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் ,மு.கி.முத்துமாணிக்கம் , குழ.செ.அருள்நம்பி , வை.ரவிச்சந்திரன் , ஞானப்பிரகாசம் , பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

