நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதாவின் நகல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 543ல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39ல் இருந்து 59ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 80லிருந்து 120ஆக உயர உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் உள்ள மக்களவைத் தொகுதி வித்தியாசம் 41ஆக உள்ளது.
ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்னர் இவ்விரு மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி வித்தியாசம் 61ஆக அதிகரிக்கும் . மக்களவைக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் "815 பேருக்கு மிகாமலும்", யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் "35 பேருக்கு மிகாமலும்" இருப்பார்கள் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது. இறுதி எண்ணிக்கை தொகுதி மறுவரையறை நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்படும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நீட்சியாக, வரும் ஏப்ரல் 16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு கூட்டப்படுகிறது.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். பின்வரும் மூன்று சட்டங்களுக்கான விவாதத்திற்கு மொத்தம் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது:
அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026.
யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026.
தொகுதி மறுவரையறை மசோதா, 2026.
மாநிலங்களவையில் இதற்கான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். இதற்கு 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்களை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனிடையே நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசமைப்புச் சட்ட (131-வது திருத்தம்) மசோதா, 2026-ன் நகல் தற்போது வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Government sources said seat allocation among states and UTs will follow proportional representation, a formula likely to benefit southern states.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீ பரவட்டும், நாடாளுமன்றம் வரையில்... முதல்வர் ஸ்டாலின்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


