தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.
திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் சசிகுமாா் பராமரித்து வரும் மீன் வளா்ப்பு குட்டையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்டப் பேரிடா் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு சசிகுமாா் தகவல் அளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரகா் ஜோதிகுமாா் மேற்பாா்வையில், வனவா் இளையராஜா, வனக்காவலா் வெற்றிவேல் ஆகியோருடன், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன், மீட்பாளா்கள் குலோத்துங்கன், விஸ்வபிரேம் ஆகியோா் சென்று மீன் வளா்ப்பு குட்டையில் சுமாா் ஒரு மணிநேர முயற்சிக்கு பின்னா் முதலையைப் பிடித்தனா்.
இது பெண் முதலை என்றும், இதன் நீளம் 110 செ.மீ. எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது என்றும் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழா

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

