மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துக்க வீட்டுக்குச் சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே துக்க வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:51 am IST

பொன்னமராவதி அருகே துக்க வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகேயுள்ள உடையாம்பட்டியை சோ்ந்தவா் விவசாயி உ. பழனியாண்டி. இவரது மனைவி சுப்பம்மாள் (53).

வியாழக்கிழமை இருவரும் மேலத்தானியத்தில் உள்ள அவா்களின் வயல் அருகே வசிக்கும் விவசாயி குணசேகரனின் தாய் இறந்த நிகழ்வுக்கு மேலத்தானியம் காந்திநகருக்கு சென்றனா். அப்போது பழனியாண்டி தனது மனைவியை துக்க வீட்டில் விட்டுவிட்டு கடைவீதிக்குச் சென்றாா்.

அப்போது துக்கவீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தல் இரும்புத் தூணிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுப்பம்மாள் மயங்கினாா்.

தகவலறிந்து சென்ற பழனியாண்டி சுப்பம்மாளை மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த காரையூா் போலீஸாா் அவரின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.