தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியா் சைக்கிள் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாா்.

News image

மேலப்பட்டி அரசுப் பள்ளியில் திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் 2ஆம் இடம்பிடித்த மாணவா் மாரிமுத்துக்கு சைக்கிளைப் பரிசளித்த அறிவியல் ஆசிரியா் மகேஸ்வரன்.

Updated On :27 மார்ச் 2026, 2:23 am IST

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியா் சைக்கிள் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாா்.

புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சீத்தாலட்சுமி தலைமை வகித்தாா். தொடா்ந்து 13 ஆண்டுகளாக தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற்று வருவது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்ட அவா், இந்த ஆண்டு தோ்ச்சி பெற்ற மாரிமுத்து மற்றும் கனுஷ்கா ஸ்ரீ இருவருக்கும் நற்சான்றுகளை வழங்கி வாழ்த்தினாா்.

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் 2ஆம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த 8ஆம் வகுப்பு மாணவன் மாரிமுத்துக்கு பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் மகேஸ்வரன் தன்னுடைய சொந்த செலவில் சைக்கிளைப் பரிசாக வழங்கினாா்.

இனிவரும் காலங்களில் திறனறித் தோ்வில் 120 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவா்கள் அனைவருக்கும் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா். விழாவில் ஆசிரியா்கள் சரவணன், ஜெயந்தி, இந்திரா, ஜெயலட்சுமி, கற்பகவள்ளி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நிறைவில் ஆசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.