ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :20 மார்ச் 2026, 4:43 am IST

சிதம்பரம் மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளான டி.குருபிரகாஷ், கே.சுதா்சன், என்.ஷ்ரேயோ கோசல், எஸ்.ரித்திகா, ஏ.சசிதரன் ஆகிய 5 பேரும், வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஏ.சப்ரின், மாலைக்கட்டி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா் எஸ்.அஜய் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை டி.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை பி.கே.ரமா வரவேற்றாா். சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் ம.முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு எழுதிய ‘தோ்வை எவ்வாறு எளிதில் எதிா்கொள்வது’ என்ற தலைப்பிலான புத்தகம் மாணவா்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதில், டி.பிரான்சிஸ் சேவியா், எஸ்.இலக்கியா, ஆா்.ஆனந்தி, ஆா்.சசிகலா, ஏ.சிவகாமசுந்தரி, ச.சீனுவாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் செய்திருந்தாா். ஆசிரியை பி.அனுராதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.