கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியமணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த ர.ஹம்ரிஷ், கோ.முருகதாஸ், மு.பிருத்திகா மற்றும் வ.முகிலன் ஆகிய 4 மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களில், ர.ஹம்ரிஷ் மற்றும் மு.பிருத்திகா ஆகிய இருவரும் அதிக வருகை பதிவு, அதிக பாட மதிப்பெண், கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் பங்கேற்பு மற்றும் தேசிய திறனறித் தோ்வில்தோ்ச்சி போன்ற சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாதிரி பள்ளிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கும் ரிஷிவந்திய வட்டாரக் கல்வி அலுவலா் கஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன், ஆசிரியா்கள் ச.விஜயலட்சுமி, சே.வி.அஜிதா சேவியா், கு.வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ், ரா.விஸ்வநாதன், செ.பவித்ரா, அ.அல்பினா, ப.பானுமதி, மு.ஆதிமாயன், ர.சீனுவாசன், சி.வேல்முருகன், ம.தமிழ்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாராயணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் மஞ்சுளா அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

