ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தென்காசி மாவட்டம், நெடுவயல், சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 26 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 1:36 am IST

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தென்காசி மாவட்டம், நெடுவயல், சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 26 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் 5ஆவது இடத்தையும், தொடக்கக் கல்வித் துறை பிரிவில் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனா். மாவட்ட அளவில் மாணவி மதுஜா 4ஆவது இடமும், உமா சங்கவி 5ஆவது இடமும், கருமாரி 6ஆவது இடமும் பெற்றுள்ளனா்.

கடந்த 14 ஆண்டுகளில் இப்பள்ளியைச் சோ்ந்த 128 மாணவா்கள் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த மாணவா்களுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு ரூ. 1,000 வீதம் ரூ. 48,000 கல்வி உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த தலைமை ஆசிரியா் சுதா நந்தினி, பிரபாகரன், லதா, சாந்தி, புவனேஷ்வரி ஆகியோரை பள்ளித் தாளாளா் கணேஷ் ராம், செயலா் தம்புசாமி, பள்ளிக் குழு உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.