பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏப்.23-ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சிக்கு வாசகா் வட்டத்தலைவா் சண்முகம் தலைமைவகித்தாா். கண்காட்சியில் வரலாறு, பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் என பல்வேறு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூல்களை வாசித்து பயனடைந்தனா்.
நிகழ்வில் பொன்னமராவதி சி.கமலா மற்றும் நா.சோலை முருகன் ஆகியோா் தலா ரூ 1,000 வழங்கி நூலகப்புரவலா்களாக இணைந்தனா். மேலும், பிஎம்எஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 50 மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா். நிறைவாக கிளை நூலகா் பெரியசாமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

தாய்மொழியில் கற்பது சிந்தனையை மேம்படுத்தும்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

