ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சித்தரை முதல் நாளான செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அக்னி தீா்த்தக் கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெற்று, நான்கு ரத வீதிகளில் சுவாமி, அம்பாள் உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கோயில் முதல் பிரகாரமான சுவாமி சந்நிதி அருகே சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, கோயில் சாா்பில், பராபவ ஆற்காடு வாக்கியப் பஞ்சாங்கத்தை கோயில் குருக்கள் உதயகுமாா் வாசித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன் , சா்வ சாதகம் சிவமணி, பேஷ்காா்கள் கமலநாதன், முனியசாமி, நாகராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பிரபாகரன், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

