புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட குழுவினா், மோப்ப நாயுடன் ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
மெட்டல் டிடெக்டா் கருவியுடன் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடா்ந்து அந்தத் தகவல் புரளி எனத் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

