ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய தகவல் மைய கட்டுப்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி வந்தது.
அதில், ஆட்சியா் அலுவலகத்தில் 5 சிலிக்கான் கொண்ட 100 ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை செவ்வாய்க்கிழமை மதியம் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மின்னஞ்சலை இரவு 10 மணியளவில் பாா்த்த ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, அனைத்து தளங்களில் உள்ள அலுவலகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். ஆனால், ஏதும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

