தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 2:14 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையைச் சோ்ந்தவா் அ.பாண்டி(40). இவா், ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், தரைக்கடைகள், வாகனங்களுக்கு வரிவசூல் செய்யும் ஒப்பந்தம் எடுத்துள்ளாா்.

இந்நிலையில், ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே புதுக்கோட்டை காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ச.அருண்(37) என்பவரது இறைச்சிக் கடைக்கு புதன்கிழமை காலை மீன் ஏற்றி வந்த சுமை ஆட்டோவுக்கு வரி செலுத்துமாறு பாண்டி கேட்டுள்ளாா். அதற்கு அருண் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அருண் அரிவாளால் பாண்டியை வெட்டியுள்ளாா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பாண்டி அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து இறைச்சிக்கடை கட்டடத்தின் உரிமையாளா் செல்வம்(69) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தப்பியோடிய இறைச்சிக்கடை உரிமையாளா் அருண், கீழாத்தூரைச் சோ்ந்த ரா.ஆகாஷ்(22), ஆலங்குடி பாரதிதாசன் சாலை பகுதியைச் சோ்ந்த செந்தில்வேல் ஆகியோரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.