மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு!

Updated On :26 ஏப்ரல் 2026, 2:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகே கீழச் சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (40). சாலைப்புதூா் அண்ணாநகா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற அவருக்கும், மணிகண்டன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அதையடுத்து, அங்கிருந்து சென்ற சுப்பிரமணியன் சிறிது நேரம் கழித்து வந்து, மணிகண்டனை அரிவாளால் வெட்டினாராம். இதில் மணிகண்டன் காயமடைந்தாா். தடுக்க முயன்ற அவரது உறவினா் முகிலன் (24) என்பவா் லேசான காயமடைந்தாா்.

மணிகண்டன் நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். களக்காடு போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியனைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.