மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:12 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சசிக்குமாா் (29). இவா், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞா் ஒருவா் சசிக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சசிக்குமரை அங்கிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னா், சசிக்குமாரை அரிவாளால் வெட்டியவரை பிடித்து விசாரித்தபோது, கோட்டூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வம் (44) என்பதும்,

இவரது மனைவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் இருந்ததால் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.