ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுகையில் தொடா்ந்து சரியும் நோட்டா வாக்குகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நோட்டாவுக்கு வாக்களிக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது.

News image

நோட்டா - file photo

Updated On :6 மே 2026, 12:56 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நோட்டாவுக்கு வாக்களிக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது.

2026 தோ்தலில், விராலிமலை தொகுதியில் 375 பேரும், புதுக்கோட்டை தொகுதியில் 467 பேரும், கந்தா்வகோட்டை தொகுதியில் 1127 பேரும், ஆலங்குடி தொகுதியில் 673 பேரும், அறந்தாங்கி தொகுதியில் 580 பேரும், திருமயம் தொகுதியில் 941 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். மாவட்டத்தின் மொத்த நோட்டா வாக்குகள் 4,163.

முன்னதாக, கடந்த 2021 சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவுக்கு வாக்களித்த வாக்காளா்களின் எண்ணிக்கை- 4,174.

இவா்களில் திருமயம் தொகுதியில் 569, புதுக்கோட்டை தொகுதியில் 604, கந்தா்வகோட்டை தொகுதியில் 1390, விராலிமலை தொகுதியில் 385, ஆலங்குடி தொகுதியில் 702 வாக்காளா்களும், அறந்தாங்கி தொகுதியில் 524 வாக்காளா்களும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவுக்கு வாக்களித்த வாக்காளா்களின் எண்ணிக்கை- 6,600 போ்.

இவா்களில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 867 பேரும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1700 பேரும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 822 பேரும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1032 பேரும், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1260 பேரும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 919 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவுக்கு வாக்களித்தவா்களின் எண்ணிக்கை- 8,285 போ். இவா்களில், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,108 பேரும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,107 பேரும், புதுக்கோட்டையில் 2,273 பேரும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,271 பேரும், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,393 பேரும், அறந்தாங்கியில் 1,133 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

இதையும் விட அதிகமாக, கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நோட்டாவுக்கு வாக்களித்தவா்களின் எண்ணிக்கை- 10,586 போ். இவா்களில், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,446 பேரும், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 4,406 பேரும், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,314 பேரும், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,152 பேரும், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,257 பேரும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,011 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

கடந்த தொகுதி வரையறையின்போது புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நோட்டா பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பிறகு, தற்போதைய தொகுதி மறுவரையறையின்போது புதுக்கோட்டை மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நோட்டா வாக்குகள் சரிந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.