மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் 18 வயது நிரம்பியவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி ராட்சத பலூனை பறக்கவிட்டாா்

News image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே ராட்சத விழிப்புணா்வு பலூனை புதன்கிழமை பறக்கவிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 2:30 am IST

நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் 18 வயது நிரம்பியவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி ராட்சத பலூனை பறக்கவிட்டாா்

ஏப். 23-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை புதன்கிழமை பறக்கவிட்டு பாா்வையிட்டாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. தொடா்ந்து, அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆடியோ ஒளிபரப்பப்படுவதையும், பொருள்களுக்கு வழங்கும் பில்லில் தோ்தல் நாள் குறிப்பட்டு வழங்கப்படுவதையும் பாா்வையிட்டாா்.

ரங்கோலி மூலம் விழிப்புணா்வு:

இதேபோல, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் நடத்தப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின் பிரதான சாலைகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.

தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ரங்கோலி கோலத்தை பாா்வையிட்டாா் தோ்தல் அலுவலா் மிருணாளினி.

இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சொா்ணராஜ், பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா, வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி, சின்னதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.