மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:36 am IST

பெரம்பலூா் உழவா் சந்தையில் காய், கனிகளால் வரையப்பட்டிருந்த தோ்தல் விழிப்புணா்வு குறித்த வாசகங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா்.

ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் நூறுசதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், கையொப்ப இயக்கங்கள், இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில், காய், கனிகளைக் கொண்டு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் வரைந்து, பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, பொதுமக்களுடன் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.

பின்னா், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள், தோ்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் மிருணாளினி பொதுமக்களிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வேளாண் வணிக துணை இயக்குநா் தெய்வீகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராணி, வேளாண்மை அலுவலா் நாகராஜன், வட்டாட்சியா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.