தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

பெரம்பலூா் பேருந்து நிலையததில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:54 am IST

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் தலைவா் அ.சி. சின்னப்பத்தமிழா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா். வை. தேனரசன், மாவட்டச் செயலா் பாவலா் ஆ. ராமா் ஆகியோா் பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் ஆசிரியா் காமராசு, அரியலூா் புலவா் அரங்கநாடன், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி நிா்வாகி ப. முத்துசாமி, பேராசிரியா் ப. செல்வக்குமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு, எழுத்தாளா் கவிஞா் குணா, வழக்குரைஞா் மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.