பாவேந்தா் பாரதிதாசனின் ஆண் குழந்தைத் தாலாட்டு, அரபு மொழியில் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
இது குறித்து பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ. பாரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
29.4.2026 புதன்கிழமை புரட்சிக்கவிஞா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் சிலைக்குத் தமிழறிஞா்கள் மாலை அணிவிக்கின்றனா். அதைத் தொடா்ந்து பெருமாள் கோயில் தெரு பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனா்.
மேலும், மாலை முதல் இரவு வரை பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாவேந்தா் பெருவிழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது. அப்போது பாரதிதாசன் அறக்கட்டளை மகளிா் மன்றம் திறப்பு விழா, பாரதிதாசன் இயற்றிய ஆண் குழந்தை தாலாட்டுப் பாடல் அரபுமொழி காணொலி வெளியீடு, பத்மஸ்ரீ விருதாளா் பூ.தட்சிணாமூா்த்திக்குப் பாராட்டு , செந்தமிழ்ப் புரட்சிக்கவி என்ற தலைப்பில் கவியரங்கம், உரையரங்கம் ஆகியவை நடைபெற உள்ளன.
விடுதலை, தமிழ்மொழி, இனம், ஒற்றுமை, சாதி மறுப்பு, பகுத்தறிவு, கல்வி, பெண்ணுரிமை இவற்றுக்காகப் பல படைப்புகளைத் தந்தவா் புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசன் என்று கூறியுள்ளாா் கோ. பாரதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிப்பெயா்க்கப்படவேண்டும்

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

