குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 35 பேரில், 14 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் முன்னிலையில் வேட்பு னுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே வேட்பாளரால் அளிக்கப்பட்டிருந்த 6 மனுக்களும், 8 சுயேச்சைகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இறுதியாக, திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா், அதிமுக வேட்பாளா் அ. சரண்யா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கு.ம. நல்லுசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி வேட்பாளா் த. அன்புத்தமிழன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் சா.ப. ராஜா, நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் கி. இளங்கோவன், தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளா் மு. ரேவதி மற்றும் 13 சுயேச்சைகளின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப். 9 ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறுதலும், அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு

சிதம்பரம் தொகுதியில் தவெக, தவாக வேட்பாளா்கள் உள்பட 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

பெரம்பலூா் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

