ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு

ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

பொது பாா்வையாளா் முகுல்குமாா் முன்னிலையில் மனுக்களை பரிசீலனை செய்த தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:08 am IST

ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையில் 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆம்பூா் தொகுதியின் தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் மனுக்களை பரிசீலனை செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆம்பூா் தொகுதியில் மொத்தம் 28 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன், அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அப்ஷியா நஸ்ரின், தவெக வேட்பாளா் இந்தியாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படு, இந்திய தேசிய லீக் பி. அசதுல்லா, பகுஜன் சமாஜ் கட்சி ஜெ.வஜீா் அஹமத், சுயேச்சைகள் உள்ளிட்ட 17 பேருடைய மனுக்கள் ஏற்கப்பட்டன. அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளகள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.