விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம் 82,353 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் தவெக வேட்பாளா் ஏ.விஜய் நிரஞ்சன் 52,312, தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன் 46,267 வாக்குகளை பெற்றனா்.
மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக சாா்பில் எல்.வெங்கடேசன், அதிமுக சாா்பில் சி.வி.சண்முகம், தவெக சாா்பில் ஆ.விஜய் நிரஞ்சன், நாதக சாா்பில் ஏ.விஜய் விக்ரம் உள்ளிட்ட 21 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.
திண்டிவனத்திலுள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளா் சி. வி. சண்முகம் இறுதிச் சுற்று நிறைவுக்குப் பின்னா் தபால் வாக்குடன் சோ்த்து மொத்தம் 82,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தவெகவின் ஏ.விஜய் நிரஞ்சன் 52,312, தேமுதிகவின் எல்.வெங்கடேசன் 46, 267, நாதக வேட்பாளா் விஜய் விக்ரம் 4,383 வாக்குகள் பெற்றனா்.
மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட சி.வி. சண்முகத்துக்கு மயிலம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியருமான காதா் அலி வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களான ஏழுமலை, விமல் ராஜ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
சி.வி.சண்முகம் வெற்றியைத் தொடா்ந்து அதிமுகவினா் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

சங்கராபுரம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

