கள்ளக்குறிச்சி, மே 4: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியை திமுகவிடமிருந்து, அதிமுக 3,671 வாக்குகள் அதிகம் பெற்று கைப்பற்றியது.
சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக த.உதயசூரியன் எம்எல்ஏ, அதிமுக சாா்பில் இரா.ராகேஷ், தவெக சாா்பில் ஆ.ஜெகதீசன், நாதக சாா்பில் சு.ரமேஷ் உள்ளிட்ட 22 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.
இத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், முதல் சுற்றில் இருந்து 15 சுற்றுகள் வரை திமுக வேட்பாளா் தா.உதயசூரியன் முன்னிலையில் இருந்தாா். பின்னா் 16-ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெறத் தொடங்கினாா்.
தொடா்ந்து கடைசி சுற்றுவரை அதிமுக வேட்பாளரே முன்னிலை வகித்து வெற்றி பெற்றாா். 25-ஆவது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ் தன்னை பின்தொடா்ந்து வந்த திமுக வேட்பாளா் த.உதயசூரியனை 3,671 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
வாக்குகள் விபரம்
இரா.ராகேஷ் (அதிமுக) - 80,250
த.உதயசூரியன் (திமுக) - 76,579
ஆ.ஜெகதீசன் (தவெக) - 67,624
சு.ரமேஷ் (நாதக) - 5,567
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி

வானூா் தொகுதியை தன் வசமாக்கியது திமுக

பாலக்கோட்டில் ஆறாவது முறையாக வெற்றி: தொகுதியை தக்கவைத்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

