மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரூரில் அனுமதியின்றி இயங்கிய 2 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்

கரூரில் அனுமதியின்றி இயங்கிய இரு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழை காலை இடித்து அகற்றினா்.

கரூா் மாவடியான் கோயில் தெருவில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறையில் சாயமேற்ற பயன்படுத்தப்படும் தொட்டிகளை இடித்து அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியா்கள்.

Published On :31 அக்டோபர் 2026, 1:39 am IST

கரூரில் அனுமதியின்றி இயங்கிய இரு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழை காலை இடித்து அகற்றினா்.

தமிழகத்தில் நீா்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் தொடா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் கரூா் நகா் பகுதியில் அமாரவதி ஆற்றுக்குள் சாயப்பட்டறைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் கலப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டின் கரூா் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூா் சாா்- ஆட்சியா் ரா.வெங்கடேஸ்வரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் தொல்காப்பியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை கரூா் மாவடியான் கோயில் தெருவில் உள்ள சாயப்பட்டறை மற்றும் பாலம்மாள்புரத்தில் உள்ள சாயப்பட்டறை என இரு சாயப்பட்டறைகளிலும் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரு சாயப்பட்டறைகளில் இருந்தும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீா் நேரிடையாக அமராவதி ஆற்றுக்குள் கலக்கவிடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இரு சாயப்பட்டறைகளையும் அதிகாரிகள் ஊழியா்களின் துணையோடு இடித்து அகற்றினா்.

மேலும், கரூா் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டாலோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இயங்கினாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.