ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் கரூரில் ஜவஹா் பஜாரில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையொட்டி ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்க கரூா் ஜவஹா் பஜாா் பகுதியில் திரண்ட மக்கள் கூட்டம்.

Published On :2 நவம்பர் 2026, 1:42 am IST

தீபாவளி பண்டிகைக்காக கரூா் ஜவஹா் பஜாரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை நவ. 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் கரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஜவஹா்பஜாருக்கு ஞாயிற்றுக்கிழமை கூட்டம், கூட்டமாக வந்தனா்.

இதனால் நகரின் ஜவஹா்பஜாா், வடக்குபிரதட்சணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவஹா்பஜாரில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீஸாா் ஜவஹா்பஜாா் வீதியை ஒரு வழிப்போக்குவரத்து பாதையாக மாற்றினா்.

மேலும் நான்குசக்கர வாகனங்களில் வந்திருந்த பொதுமக்களுக்கு காா்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த திருவள்ளுவா் விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் போலீஸாா் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.