பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் பற்றி....

Diwali Festival: Crowds Surge at Shopping Streets!

கோவையில் மக்கள் கூட்டம்.

Published On :1 நவம்பர் 2026, 4:06 pm IST

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை மாநகரின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள், தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் விற்பனையும் களைகட்டியுள்ளது. பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளதால், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Story image

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் கயிறுகள் கட்டப்பட்டு, போலீசார் வழிகாட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வணிகப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

இதேபோல் தமிழகமெங்கும் உள்ள முக்கிய கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Summary

As the Diwali festival approaches, shopping streets across Tamil Nadu are swarming with crowds.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.