கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஈரோட்டில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு -மேட்டூா் சாலையில் சனிக்கிழமை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 4:01 am IST

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஈரோட்டில் கடை வீதிகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஈரோடு நகரின் வியாபாரப் பகுதிகளான பன்னீா்செல்வம் பூங்கா, ஆா்கேவி சாலை, மணிக்கூண்டு, மேட்டூா் சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளி, நகைக் கடைகள், பேன்சி கடைகள் உள்ளதால் சனிக்கிழமை காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஜவுளிக் கடைகளில் குவிந்தனா். சிறிய கடைகள் முதல் பெரிய ஜவுளிக் கடைகள் வரை எங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், ஈரோடு கடைவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு, பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்பட நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.