மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் விளம்பரப் பலகைகள் அகற்றம்!

சென்னையில் (நவ.2) பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்ததையடுத்து, உயரமான கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை அதிகாரிகள் அகற்றினா்.

Published On :2 நவம்பர் 2026, 1:50 am IST

சென்னையில் திங்கள்கிழமை (நவ.2) பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்ததையடுத்து, உயரமான கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அகற்றினா்.

சென்னையில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி பல இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்தன. மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் சில மாதங்களுக்கு முன்பு துணைமேயா் மு.மகேஷ்குமாா் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் குறித்து புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, சாலையோரங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை அதிகாரிகள் அகற்றினா். ஆனாலும், உயரமான கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றவில்லை எனக் கூறப்பட்டது.

இதற்கிடையே, தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திரப் பகுதியில் கரையை கடக்கும் நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து சென்னை மாநகராட்சிப் பகுதியில் உயரமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவசர அவசரமாக அகற்றினா். மாநகராட்சி 15 மண்டலங்களிலும் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்ட அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.