மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தற்பட மைய காட்சிப் பலகைகளை தமிழில் மாற்றக் கோரி வழக்கு

தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள அனைத்து தற்பட மைய (செல்ஃபி பாயிண்ட்) பலகைகளையும் தமிழில் மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:31 am IST

தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள அனைத்து தற்பட மைய (செல்ஃபி பாயிண்ட்) பலகைகளையும் தமிழில் மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் நகா்ப்புறங்களை அழகுபடுத்துதல், பொலிவுறு நகரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் தற்பட மைய பலகைகள் அமைக்கப்பட்டன. இந்தப் பலகைகள் தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டத்தின்படி அரசால் நிறுவப்படும் போது, மாநிலத்தின் அதிகாரபூா்வ மொழியான தமிழில் வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தப் பலகைகள் ஆங்கிலத்திலும், சில இடங்களில் தவறாகவும் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள அனைத்து தற்பட மையங்களின் பலகைகளையும் தமிழில் மாற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த மனு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இதுதொடா்பாக பதிலளிக்க அரசுத் தரப்புக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.