மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெங்களூருவில் இருந்து போதை மாத்திரை கடத்தி வந்த 3 இளைஞா்கள் கைது

பெங்களூருவில் இருந்து கரூருக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:58 am IST

பெங்களூருவில் இருந்து கரூருக்கு போதை மாத்திரைகள் கடத்தி வந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் படை பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை காலை வேலாயுதம்பாளையம் அடுத்த தவுட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் உள்ள சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞா்கள் வந்தனா். அவா்கள் வைத்திருந்த கைப்பையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், டெபண்டால் எனும் 480 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து நடத்திய விசாரணையில்இருவா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் சுல்தான் பேட்டை பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மணிகண்டன்(26), ஓலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெபருல்லா மகன் இலியாஸ்(28), மற்றொருவா் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கிஷோா் குமாா்( 28) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவா்கள் பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து கல்லூரி மாணவா்களிடம் விற்றதும் தெரியவந்தது. தொடா்ந்து அவா்களிடம் இருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் மூன்று பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட மூன்று போ்களின் கைப்பேசிகளில் இருந்த எண்களின் மூலம் யாா், யாா் போதை மாத்திரை வாங்கினாா்கள் என்ற விவரம் குறித்தும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.