தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ஒடிசா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தி செல்வதற்காக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சண்முக கணபதி

Published On :29 அக்டோபர் 2026, 3:54 am IST

ஒடிசா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தி செல்வதற்காக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ரகசிய தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், புதன்கிழமை ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொள்ள முயற்சித்தபோது, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பிக்க முயன்றாா்.

இதையடுத்து காவல் துறையினா், அந்த இளைஞரை பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டதில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவா் தஞ்சாவூா் கிழக்கு வாசல், காவாலிக்கார தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சண்முக கணபதி (29) என்பதும், அவ்வப்போது ஒடிசா மாநிலம் சென்று அங்கு கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது.

இவா் மீது ஏற்கெனவே தஞ்சை மாவட்டத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.