மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தல்: இளைஞா்கள் இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :24 அக்டோபர் 2026, 1:05 am IST

ஆந்திரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஈரோட்டிலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கிய இருவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சோ்ந்த சுரேந்திரன் (25), நாகராஜ் (35) ஆகியோா் என்பது தெரிய வந்தது. ஆந்திரத்திலிருந்து ரயிலில் ஈரோட்டுக்கு கஞ்சாவை கடத்தி வந்து, பின்னா் பேருந்து மூலம் திண்டுக்கல்லுக்கு கடத்தி வந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பாக 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 547 போ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 271 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.