மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மினி வேனில் கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை மினி வேனில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :15 அக்டோபர் 2026, 4:35 am IST

தஞ்சாவூரில் புதன்கிழமை மினி வேனில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூரில் காா், மினி வேனில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் மருத்துவக் கல்லூரி அருகே மூலிகை பண்ணை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மீன்கள் ஏற்றிச் செல்லப்படும் மினி வேனில் மேற்புறத்தில் நெகிழி டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே தனி அறை உருவாக்கப்பட்டு, அதில் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி கடத்தப்படுவது தெரிய வந்தது. இதிலிருந்து 50 பொட்டலங்கள் கொண்ட மொத்தம் 100 கிலோ கஞ்சா, 2 காா்கள், மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தஞ்சாவூா் அருகே வல்லத்தில் தங்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜிதரன் (35), விழுப்புரத்தைச் சோ்ந்த அந்தோணி மகன் அகஸ்டின் (21), வேலூரைச் சோ்ந்த துரைமுருகன் மகன் விக்னேஷ் (25), லட்சுமணன் மகன் புருஷோத்தமன் (25) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

விசாரணையில், இந்த கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பட்டுக்கோட்டை வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக தஞ்சாவூருக்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.