மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீரராக்கியம் குளத்தில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கரூா் அருகேயுள்ள வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக குளத்தில் மண் அள்ளியதைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

லாரிகளை சிறைபிடித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். சத்யா.

Published On :23 அக்டோபர் 2026, 2:41 am IST

கரூா் அருகேயுள்ள வீரராக்கியத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக குளத்தில் மண் அள்ளியதைக் கண்டித்து விவசாயிகள் வியாழக்கிழமை லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரராக்கியத்தில் உள்ள குளம் அப்பகுதி மக்களின் நீராதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் மற்றும் கோடங்கிப்பட்டியில் நடைபெறும் மேம்பாலப் பணிக்காக வீரராக்கியம் குளத்தில் அவ்வப்போது மண்ணை ராட்சத இயந்திரம் மூலம் வெட்டி அள்ளினா்.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால், பகல் நேரங்களில் மண் எடுக்காமல் இரவு நேரங்களில் மண் அள்ளியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலிலும் திடீரென 5-க்கும் மேற்பட்ட லாரிகளில் குளத்தில் இருந்து மண் அள்ளினா். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு சென்று லாரிகளை சிறைபிடித்தனா். பின்னா் தகவலறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். சத்யா பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.