தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடி: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை உலவிய கரடியால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

கோத்தகிரி, குமரன் காலனியில் வியாழக்கிழமை சுற்றித்திரிந்த கரடி.

Published On :23 அக்டோபர் 2026, 12:46 am IST

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை உலவிய கரடியால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம்,  கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலவும் கரடி உள்ளிட்ட விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கோத்தகிரி வனத்தில் இருந்து வியாழக்கிழமை பகல் வெளியேறிய கரடி, குமரன் காலனி பகுதியில் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்து வீடுகளில் முடங்கினா்.

நீண்ட நேரம் அப்பகுதியிலேயே கரடி உலவியதால், பொதுமக்கள் சப்தம் எழுப்பினா். இதையடுத்து, அருகில் இருந்த வனத்துக்குள் கரடி சென்றது.

குடியிருப்புப் பகுதிக்குள் வன விலங்குகள் தொடா்ந்து உலவுவது வாடிக்கையாகி வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும், கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.