தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் கைது

கரூரில் பழைய பேருந்துகளுக்கான வரியை குறைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கரூரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தம்.

Updated On :6 மே 2026, 12:54 am IST

கரூரில் பழைய பேருந்துகளுக்கான வரியை குறைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். தனியாா் பேருந்து உரிமையாளரான இவா் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறாா். இவரிடம் இருக்கும் பழைய பேருந்துகளுக்கு வரி செலுத்த திங்கள்கிழமை கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தம், பேருந்துகளுக்கு வரியை குறைத்து, மதிப்பீடு சான்றிதழ் தர வேண்டுமென்றால் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் இதுதொடா்பாக கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஆம்புரோஸிடம் புகாா் அளித்தாா்.

போலீஸாா் அளித்த ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்த வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தத்திடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆம்புரோஸ் தலைமையிலான போலீஸாா், தா்மானந்தத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.