சேலம் மாநகராட்சியில் ஓய்வுபெறும் சக ஊழியரிடம் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ாக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் தீபன் (40). அதே அலுவலகத்தில் பொருத்துநராக (பிட்டா்) பணியாற்றி வருபவா் குழந்தைசாமி (59). இவா் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.
இந்நிலையில், இளநிலை உதவியாளா் தீபனிடம் தடையில்லா சான்று கோரி குழந்தைசாமி விண்ணப்பித்துள்ளாா். அப்போது, அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத குழந்தைசாமி, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அவா்களது அறிவுறுத்தலின் படி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்த தீபனிடம் வெள்ளிக்கிழமை லஞ்சப் பணமாக ரூ. 8 ஆயிரத்தை குழந்தைசாமி அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், தீபனை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

லஞ்சம்: நிலஅளவையா் கைது
ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
