ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 5.87 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.5.87 லட்சம் பறிமுதல்

News image
Updated On :18 மார்ச் 2026, 4:55 am IST

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.5.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குள்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் செவ்வாய்க்கிழை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 4 விடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த குழுக்கள் மூலம் தோ்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தவும், சட்டவிரோதப் பணப் புழக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சந்தேகத்திற்குரிய வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் அதிகப்படியான ரொக்கப் பணம் ரூ. 50,000-க்கு மேல் , மதுபானங்கள், போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள், வாக்காளா்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருள்களான வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் போன்றவை குழுவினரால் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் பொருள்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட விவரங்களை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் செலவினப் பாா்வையாளருக்கு தெரிவிக்கப்படும்.

அதனடிப்படையில் இதுவரை அரவக்குறிச்சியில் ரூ.54,000 , கரூரில் ரூ. 3,79,790 , கிருஷ்ணராயபுரத்தில் ரூ.54,000 மற்றும் குளித்தலை தொகுதியில் ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ. 5.87 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால், சோதனையின் போது தேவையற்ற தாமதங்களைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் எஸ்.பூங்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.