மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மணல் பதுக்கிய வழக்கு: கரூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் மீண்டும் ஆஜா்

மணல் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம் .ஆா். விஜயபாஸ்கா் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினாா்.

News image

கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் புதன்கிழமை ஆஜராகி விட்டு வெளியே வந்த முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:40 am IST

மணல் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் எம் .ஆா். விஜயபாஸ்கா் கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினாா்.

காவிரி ஆற்று மணலை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக கரூா் நகர காவல் நிலையத்தினா் தொடா்ந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அண்மையில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அவா் நீதிமன்றத்தில் சரணடைய மாா்ச் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது.

இதையடுத்து தோ்தல் பணி காரணமாக நீதிமன்றத்தில் சரணடைய காலஅவகாசம் கேட்டு எம்.ஆா்.விஜயபாஸ்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு காலஅவகாசத்தை ஏப். 28-ஆம் தேதி வரை நீட்டித்தும், ஏப். 29, 30-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றம் விதித்தது.

இதையடுத்து எம். ஆா் விஜயபாஸ்கா், கரூா் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்பு ஏப். 27-ஆம்தேதி ஆஜரானாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமாா், புதன்கிழமை(29-ம்தேதி) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இதற்கிடையே ஏப். 28-ஆம் தேதி முதல் ஒருவாரத்துக்கு கரூா் நகர காவல்நிலையத்தில் தினமும் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இந்நிலையில், கரூா் நகர காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு வரும் எம்.ஆா். விஜயபாஸ்கா் நீதிமன்ற உத்தரவின்படி புதன்கிழமை நீதிபதி பரத்குமாா் முன்பு ஆஜரானாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.