கோவில்பட்டியில் சாலை விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இலுப்பையூரணி, மறவா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகவேல் மகன் கனகராஜ் (41). கட்டடத் தொழிலாளி. இவா் ஏப். 14ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா்.
ஆனால், அவா் சிகிச்சை பெறாமல் வீட்டிற்கு சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏப். 17ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி மற்றும் சிராய்ப்பு ஏற்பட்ட இடங்களில் வலி ஏற்பட்டதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
பின்னா், மீண்டும் வலி அதிகமானதால் ஏப். 23ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய மூதாட்டி மரணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

