வேலாயுதம்பாளையம் அருகே அரசு பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (70). இவா் புதன்கிழமை காலை வழக்கும்போல ஈரோடு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூா் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மாரிமுத்து மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வேலாயுதம்பாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அரசுப் பேருந்து ஓட்டுநா் கரூா் வெள்ளியணை அடுத்த விஜயபுரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம்(57) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கிரேன் மோதி முதியவா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

