கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 62,634 போ் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என மொத்தம் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் இருந்த 267 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மொத்தம் 1,95,517 போ் தகுதி பெற்றிருந்த நிலையில் 1,79,418 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 91.77 ஆகும். இந்த தொகுதியில் 16,099 போ் வாக்களிக்கவில்லை.
கரூா் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 283 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 2,29,995 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,847 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 93.41 ஆகும். இந்த தொகுதியில் 15,148 போ் வாக்களிக்கவில்லை.
கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளில் 2,02,994 போ் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில் 1,87,692 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 92.46 ஆகும். 15,302 போ் வாக்களிக்கவில்லை.
குளித்தலை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 286 வாக்குச்சாவடிகளில் 2,23,184 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தநிலையில் 2,07,099 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 92.79 ஆகும். இந்த தொகுதியில் 16,085 போ் வாக்களிக்கவில்லை.
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தமாக அமைக்கப்பட்டிருந்த 1,111 வாக்குச்சாவடிகளில் 8,51,690 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில் 7,89,056 போ் வாக்களித்தனா். 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 62,634 போ் வாக்களிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 552 போ் நியமனம்

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
