கரூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள் அலுவலா்களால் சேகரிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் வயது முதிா்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தே செலுத்தும் வகையில் அஞ்சல் வாக்குப் படிவம் 12 டி மாவட்டத்திற்கு 3,143 என்ற எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் வாக்குகளை வரும் 13, 14-ஆம் தேதிகள் மற்றும் 18-ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச்சாவடி அலுவலா் குழு மூலமாக வீடுகளுக்கே சென்று சேகரிக்கப்பட உள்ளது. இதனால் கரூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து 12டி படிவம் சமா்ப்பித்த 85 வயதிற்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் 13, 14, 18-ஆம் தேதிகளில் வீட்டிலிருந்தவாறே தங்களது அஞ்சல் வாக்கைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

