மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவு அங்காடியில் குறைந்த விலையில் வழங்கப்படும் அரிசி தரமானதே: ஆட்சியா் விளக்கம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியில், குறைந்த விலையில் வழங்கப்படும் சன்ன ரக அரசி தரமானது என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Rice prices

அரிசி - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:01 am IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியில், குறைந்த விலையில் வழங்கப்படும் சன்ன ரக அரசி தரமானது என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழக அரசின் உத்தரவின்படி, அரியலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவு செய்வதுடன், அவா்களுக்குக் குறைந்த விலையில் தரமான சன்னரக அரிசி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலம் விற்பனைக்காக வழங்கப்பட்ட சன்னரக அரிசி, தரமற்ற நிலையில் உள்ள அரிசி எனவும், அரியலூரில் அமைச்சா் வினோத் பங்கேற்ற நிகழ்ச்சியில் சன்னரக அரிசியை வாங்க பொதுமக்கள் மறுப்பு என்ற தவறான செய்திகள் சில ஊடகங்களில் தொடா்ந்து வெளியாகி வருகின்றன.

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் தொடா்பாக தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஊடகங்களில் பரப்பப்படும் முற்றிலும் தவறான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.