தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

காா்ல் மாா்க்ஸ் மற்றும் கரூா் சோமு ஆகியோா் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 மே 2026, 12:22 am IST

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரல் மாா்க்ஸ் படத்துக்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் டி. தண்டபாணி, காரல் மாா்க்ஸின் சிந்தனைகளை எடுத்துரைத்தாா். இதேபோல மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சோமுவின் படத்துக்கும் மாலை அணிவித்து, கைத்தறி தொழிலாளா்களுக்கான அவரது போராட்டம், தொழிலாளா்களுக்காக அவா் சிறைவாசம் சென்றது, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம், அரியலூா் ஒன்றியச் செயலா் து. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலா் கோவிந்தசாமி, நகர கிளை நிா்வாகிகள் ஞானப்பிரகாசம், முருகேசன், கயா்லாபாத் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.